அரியலூர் மாணவி தற்கொலை வழக்கில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தியது.
அரியலூரைச் சேர்ந்த மாணவி, தங்கி படித்த தஞ்சை தனியார் பள்ளியில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் பிரியங்கா கனூங்கோ உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர். தஞ்சாவூரில் உள்ள ரயில்வே அலுவலர்கள் விடுதியில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் குழந்தைராஜ், மாவட்ட காவல் எஸ்.பி. ரவளிப் பிரியா, மாணவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்டோரிடம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் விசாரணை நடத்தினார்.
பின்னர் மாணவியின் உறவினர்கள், மாணவி படித்த பள்ளியின் சக மாணவிகள், அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மாணவி படித்த தனியார் பள்ளியிலும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்துகிறது.