சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்டித்து அந்தக்கல்லூரி மாணவர்கள் சென்னையில் பேரணி நடத்தினர்
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் இக் கல்லூரி தனியார் கல்லூரியைப் போல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடமிருந்தும் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. இவற்றை கண்டித்து 29நாட்களாக போராட்டம் நடத்தி வரும் கல்லூரி மாணவர்கள் ஆளுநரை சந்தித்து மனு அளிப்பதற்காக சென்னைக்கு பேரணியாக வந்தனர்.