தமிழ்நாடு

அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு போராடிய மாணவர்கள்: ஸ்தம்பித்தது கோவை!

Rasus

கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும்‌, நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

கோவை நகரின் மையப்பகுதியில் உள்ள முக்கிய சாலையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் காரணமாக போக்குவ‌த்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ‌ஈடுபட்ட மாணவர்களை ‌காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ய முயன்றனர். ‌இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்‌ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்‌பட்டது.

இதற்கிடையில் அங்கு கூடிநின்ற பெண்கள் உள்பட பொதுமக்களும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரையும் காவல்துறையின‌ர் கைது செய்தனர்.