private school
private school pt desk
தமிழ்நாடு

மயிலாடுதுறை - 24 மணி நேரத்தில் மாணவர்கள் வடிவமைத்த செயற்கை கோள்: பலூன் மூலம் விண்ணில் செலுத்தி சாதனை

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் செயல்பட்டு வரும் சுபம் வித்யா மந்திர் மற்றும் சென்னை கோலா சரஸ்வதி பள்ளி மாணவ, மாணவிகள் இணைந்து சிறிய செயற்கைக் கோளை ( a small cube satellite) வடிவமைத்தனர். 24 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட 2 கிலோ எடையுள்ள இந்த சிறிய ரக செயற்கை கோள், பூமியின் தட்ப வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்ய விண்ணில் ஏவப்பட்டது.

Baloon

ராட்சச ஹீலியம் பலூனில் செயற்கை கோளை இணைத்து விண்ணில் ஏவினர். 30 கி.மீ உயரம் வரை செல்லூம் செயற்கை கோள், பின்னர் ஹீலியம் பலூன் செயலிழந்து மூன்று மணி நேரத்திற்குப் பின் அதில் இணைக்கப்பட்டுள்ள பாராசூட் உதவியுடன் கடம்பூர் அருகே தரையை வந்தடையும் என இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.

மேலும் “விண்ணிற்கு சென்று பூமிக்கு திரும்பும் மூன்று மணி நேரத்தில் பூமி மற்றும் விண்வெளியின் தட்ப வெட்ப நிலை குறித்த ஆய்வு செய்து தரவுகளை உடனுக்குடன் பள்ளியில் உள்ள கணினிக்கு வழங்கும். அதே நேரம் செயற்கை கோளின் ஒவ்வொரு அசைவையும் இங்கிருந்து கண்காணித்து வருகிறோம். இது முதல் முயற்சிதான். 3 மணி நேரம் மட்டுமே தற்போது ஆய்வு செய்கிறோம். மாணவ, மாணவிகள் தொடர்ந்து அடுத்த கட்ட முயற்சியை மேற்கொள்வார்கள்” என தெரிவித்தார்.

Satellite

பள்ளி வளாகத்தில் இருந்து ஹீலியம் பலூன் மூலம் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.