தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை: ஸ்டாலின்

அமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை: ஸ்டாலின்

webteam

பதவியை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும் அமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

திருச்சி விமான நிலையத்துக்கு இன்று காலை வந்த மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நியாய விலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டுப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பதவியை பாதுகாத்துக்கொள்ள நினைக்கும் அமைச்சர்களுக்கு மக்கள் மீது அக்கறையில்லை என கூறினார். ’நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக உள்ளனர்’ என கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறிய கருத்துக்குப் பதிலளித்த ஸ்டாலின், எந்த மாணவர்கள் தயாராக உள்ளனர்? என்று கேள்வியெழுப்பினார். நீட் தேர்வு குறித்து மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசின் அறிவிப்புக்கு பின்னரும் நெடுவாசலில் போராட்டம் தொடர்வது குறித்த கேள்விக்கு, இது போராட்டக்காரர்கள் தமிழக அரசை நம்பாமல் இருப்பதையே காட்டுகிறது என்றார்.