தமிழ்நாடு

அடிக்கடி பெயர்ந்து விழும் பள்ளி மேற்கூரை: அச்சத்துடன் பாடம் படிக்கும் மாணவர்கள்..!

அடிக்கடி பெயர்ந்து விழும் பள்ளி மேற்கூரை: அச்சத்துடன் பாடம் படிக்கும் மாணவர்கள்..!

Rasus

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியிலுள்ள மேலகுடியிருப்பு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுந்து வருகிறது. இதனால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர்.

அரியலூா் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் உள்ள மேலகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ளது. சுமார் 110-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். 7 ஆசிரியா்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளி கட்டிடத்தின் மேற்புறம் உள்ள சிமெண்ட் காரைகள் மோசமான நிலையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனிடையே சிமெண்ட் காரைகள் சிறிது சிறிதாக அவ்வப்போது பெயர்ந்து விழுவதால் மாணவா்கள் அச்சத்துடன் பாடம் பயின்று வருகின்றனா். ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு உடனடியாக புதிய கட்டடங்கள் கட்டி கொடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.