தமிழ்நாடு

‘ஒருவருக்குகூட மருத்துவப் படிப்பில் இடமில்லை’ - அரசு நீட் பயிற்சி மையங்களின் அவலம்

‘ஒருவருக்குகூட மருத்துவப் படிப்பில் இடமில்லை’ - அரசு நீட் பயிற்சி மையங்களின் அவலம்

Rasus

அரசு நடத்திய நீட் பயிற்சி மையங்களில் படித்த எந்தவொரு மாணவருக்கும் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற ஏதுவாக அரசு சார்பில் நீட் பயிற்சி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீட் பயிற்சி மையங்களில் படித்த எந்தவொரு மாணவருக்கும் இந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட் கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.

19,355 மாணவர்கள் இந்தாண்டு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற நிலையில், இரண்டாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்த்தபோது ஒரு மாணவருக்கு கூட அரசு மருத்துவக் கல்லூயில் இடம் கிடைக்கவில்லை. அரசு மருத்துவக் கல்லூரியில் பிசி வகுப்பை சேர்ந்த மாணவர்களுக்கான கட் ஆஃப் 474. ஆனால் நீட் பயிற்சி மையங்களில் படித்த மாணவர்களின் முதல் மதிப்பெண்ணே 440 தான் ஆகும். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமாசங்கர் என்ற மாணவர்கள் இந்த மதிப்பெண்ணை பெற்றிருந்தார். அதனால் இந்த மாணவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

அதேசமயம் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு அதிகம் பேர் நீட் நுழைவுத் தேர்வில் 300-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.