மருத்துவ மாணவர் கலந்தாய்வில் முறைகேடு நடப்பதாகக் கூறி மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் முறைகேடு நடைபெறுவதாகக் கூறி மாணவர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏழை, எளிய மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆதங்கப்பட்டனர். சேர்க்கை கலந்தாய்விலும் பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள பல்நோக்கு மருத்துவமனையை மாணவர் அமைப்பினர் முற்றுகையிட்டனர்.