தமிழ்நாடு

போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள் கைது

போராட்டத்தை கைவிட மறுத்த மாணவர்கள் கைது

webteam

கோவை வ.உ.சி மைதானத்தில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்ல மறுத்த மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவை வ.உ.சி மைதானத்தில் இருந்த இளைஞர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். போராட்டத்தைக் கைவிட மறுத்து கோவை வ.உ.சி மைதானத்தில் 7ஆவது நாளாக மாணவர்கள் மற்றும் பொதுமக்‌கள் போராட்டத்தைத் தொடர்ந்த வண்ணம் இருந்த‌னர். இந்த நிலையில்,கோவை மாநகர காவல் ஆணையாள‌ர் அமல்ராஜ் தலைமையில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். எனினும், இளைஞர்கள் அதனை ஏற்க மறுத்தனர். இதனால், அங்கு குவிக்‌கப்பட்டிருந்த 500க்கும் அதிகமான காவல்துறையினர் போராட்டக்காரர்களை வலுகட்டாயமாக அகற்றினர். வ.உ.சி மைதானத்தில் இருந்து அகற்றப்பட்ட இளைஞர்கள், அருகே அவிநாசி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட‌னர். அங்கும் காவல்துறையினர் சென்று வலுக்க‌ட்டாயமாக போராட்டக்காரர்களை அகற்றியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 300க்கும் அதிகமான மாணவர்கள் அங்கிருந்து வெளியேற மறுத்ததால் காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.