தமிழ்நாடு

கண்மாயை தூர்வார உண்டியல் பணத்தை அள்ளிக்கொடுத்த பள்ளிக் குழந்தைகள்

கண்மாயை தூர்வார உண்டியல் பணத்தை அள்ளிக்கொடுத்த பள்ளிக் குழந்தைகள்

webteam

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கண்மாயை தூர்வாரும் பணிக்காக சில பள்ளிக் குழந்தைகள் தங்கள் உண்டியல் பணத்தை நிதியாக அளித்துள்ளனர். இவர்களின் நெகிழ வைக்கும் செயல் மற்றவர்களையும் இப்பணியில் இணைக்க முன்னுதாரணமாக்கி இருக்கிறது.

உசிலம்பட்டியின் மையப்பகுதியில் அமைந்துள்ள கண்மாய் சுமார் 50‌ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமான இந்த கண்மாய் கடந்த 40 ஆண்டுகளாக தூர்வாரப்படாமலேயே உள்ளது. இறைச்சிக் கழிவுகள், சீமைக்கருவேல மரங்கள் என மோசமான நிலையில் உள்ள கண்மாயை தூர்வார பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததையடுத்து, கண்மாயை தூர்வார தன்னார்வ அமைப்பினர் பொதுப்பணித்துறையிடம் அனுமதி கோரினர். இதற்கான அனுமதி கடந்த ஆண்டு கிடைத்த நிலையில், இரண்டே மாதத்தில் கண்மாய் முழுவதும் தூர்வாரப்பட்டது. மீண்டும் சீமைக்கருவேல‌ மரங்கள் வளர்ந்த நிலையில் 2ஆம் கட்டமாக தூர்வாரம் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 6 வயது இளமதியும் 6 ஆம் வகுப்பு படிக்கும் தரணியும் தங்கள் உண்டி‌ல் பணமான 40‌ ரூபாயை அளித்தனர்.

இதேபோல, தியானேஷ் என்ற 10ஆம்‌ வகுப்பு மாணவர் தனது சிறுசேமிப்பு தொகையான 2,000 ரூபாய் பணத்தை கண்மாய் தூர்வாரும் பணிகளுக்காக அளித்துள்ளார். இளம் தலைமுறையின் இந்த செயல் உசிலம்பட்டி மக்களை நெகிழ வைத்துள்ளது.