அரசியல் ஆதாரங்கள் இல்லமால் மதுவிற்கு எதிராக மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் இருக்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் அகற்றும் வரை தன்னுடைய போராட்டம் தொடரும் என தெரிவித்தார்.,கோடை விடுமுறைக்கு பிறகு மாணவர்களை ஒன்று திரட்டி மதுவிற்கு எதிராக மாணவர் மாரத்தான் தமிழகம் முழுவதும் நடத்துவோம் என வைகோ கூறினார். அரசியல் கட்சி கொடி அடையாளங்கள் இல்லாமல் மக்களை திரட்டி போராட்டத்தில் வெற்றி பெறுவோம் எனவும் அவர் தெரிவித்தார்