சென்னை கவின்கல்லூரி மாணவர் பிரகாஷ் தற்கொலை செய்துகொண்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டப்பட்ட வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை கவின் கலை கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்த வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் கடந்த மாதம் 25ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இதற்கு கல்லூரி துறைத் தலைவர் ரவி பல்வேறு நெருக்கடிகளை கொடுத்ததே காரணம் என்று அவர் வீடியோ பதிவில் கூறியிருந்தார். இதையடுத்து மாணவர் பிரகாஷை தற்கொலைக்கு தூண்டிய ரவி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
தற்போது, தற்கொலைக்கு தூண்டப்பட்டதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதி வேண்டி விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நடிகர் சத்யராஜ், பா.ரஞ்சித் ஆகியோர் கலந்துக் கொண்ட கண்டன கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பிரகாஷ் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.