மாணவி அனிதாவுக்கு நீதி கிடைக்க வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்னையில், நுங்கம்பாக்கத்திலுள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். போராட்டத்தை கைவிடுமாறு காவல் துறையினர் அவர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதே போல கோவை அரசுக் கல்லூரியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.