அரியலூர் மாணவி அனிதா தற்கொலையைத் தொடர்ந்து, திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். உடனடியாக நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க தமிழக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு சென்னை உட்பட பல்வேறு இடங்களில் மாணவர் அமைப்பினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். நெல்லையில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதேபோல மதுரை, கோவை, ஆம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களும், அஞ்சலி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.