டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்துகொண்டார்.
வரலாற்று துறையின் எம்ஃபில் மாணவரான முத்துக்கிருஷ்ணன், டெல்லி முனிர்கா பகுதியில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதி அறையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது. சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவரான முத்துக்கிருஷ்ணன், எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் பாரபட்சம் காட்டப்படுவதாக ஃபேஸ்புக்கில் தனது கடைசி பதிவில் குறிப்பிட்டுள்ளார். ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கிடைக்க போராடிவரும் மாணவர் குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களை முத்துகிருஷ்ணன் முன்னெடுத்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.