தமிழ்நாடு

வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் பலி!

வகுப்பறையில் பாம்பு கடித்து மாணவர் பலி!

webteam

கும்பகோணம் அருகே தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு மாணவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். 

கும்பகோணம் எஸ்.புதூரிலுள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த மாணவர் ராஜேஷ். 8 வகுப்பு படித்து வந்த இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வகுப்பில் சக மாணவர்களுடன் இருந்துள்ளார். அப்போது வகுப்பறைக்குள் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்து சக மாணவர்களுள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து மாணவர்களின் அலறல் சத்தம் கேட்க, கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேஷை அந்தப் பாம்பு கடித்துள்ளது. 

இதனால் உடம்பில் விஷம் ஏறிய அந்த மாணவர், ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் விஷம் உடம்பு முழுக்கு பரவியாதால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.‌ இதையடுத்து அங்கு குவிந்த மாணவரின் உறவினர்கள் மற்றும் மற்ற மாணவர்களின் பெற்றோர், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாத பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.