தமிழ்நாடு

கவனக்குறைவால் சாலையை கடந்தபோது மாணவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சிகள்

கவனக்குறைவால் சாலையை கடந்தபோது மாணவர் உயிரிழப்பு: சிசிடிவி காட்சிகள்

Rasus

கோவை நவக்கரை அருகே இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்ட இளைஞர் ஒருவர் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்றபோது வேன் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜெய்சன் ஜோஸ், கோவையிலுள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். தனது மாமா வீட்டில் தங்கி படித்து வந்த ஜெய்சன் ஜோஸ், கல்லூரிக்குச் செல்லும் முன்பு நவக்கரை பகுதியிலுள்ள பெட்ரோல் பங்க்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.

வேன் மோதியதில் படுகாயமடைந்த மாணவர் ஜெய்சன் ஜோஸ், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் ஜெய்சன் ஜோஸ் மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதனிடையே, வேனின் ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.