கிண்டி அருகே முகம் சிதைந்த நிலையில் தொழிற்கல்வி மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள சிடிஐ விடுதியின் பின்புறம், இளைஞரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு
தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். நண்பர்கள் கொடுத்த
தகவலின் அடிப்படையில், உயிரிழந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த சிவக்குமார் என்பதும், அவர் தொழிற்கல்வி
பயின்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த மாணவரின் முகம்,
தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரை யரோ அடித்துக்கொலை செய்திருக்கலாம் என்ற அடிப்படையில்
காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.