தமிழ்நாடு

கட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி!

கட்டணம் செலுத்தாததால் தனியார் பள்ளி அளித்த தண்டனை - மருத்துவமனையில் மாணவி!

webteam

வாணியம்பாடியில் தனியார் பள்ளி ஒன்று கல்வி கட்டணம் செலுத்தாத மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததால் அவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி செட்டியப்பணூர் பகுதியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் காயத்ரி என்ற மாணவி பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான கல்வி கட்டணத்தை காயத்ரி செலுத்தவில்லை எனத் தெரிகிறது. இதனால் மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்குமாறு தனியார் பள்ளி வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இன்று காலை முதல் மாலை வரை வெளியே நின்றதால் மாணவி காய்த்ரி மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.