தமிழ்நாடு

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு

பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு

webteam

வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்ததாழ்வு நிலையால் பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை காரணமாக  ஆந்திரா மசூலிபட்டணம் கடற்கரையில் இருந்து தென் கிழக்கில் 250 கி.மீ., துாரத்தில் புயல் சின்னமாக உருவாகி உள்ளது. இப்புயலால் தமிழக கடலோர பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பாம்பன், இராமேசுவரம், மண்டபம் உள்ளிட்ட பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் ஆழம் நிறைந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், பாதுகாப்புடன் செல்லவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென ஏற்படும் மாற்றங்கள் குறித்து துறைமுக அதிகாரிகள் முறையாக அறிவிப்பு வெளியிடுவதில்லை என்றும் மீனவர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.