தமிழ்நாடு

கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

கடலோரப் பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

webteam

வானிலை ஆய்வு மைய அறிவிப்பை அடுத்து பாம்பன், நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தென் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அத்துடன் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் பாம்பன், நாகை, கடலூர் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதில் பாம்பன் துறைமுகத்தில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், நாகை, புதுச்சேரி மற்றும் கடலூர் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது. 3ஆம் எண் கூண்டிற்கு திடீர் காற்றோடு மழை பொழியும் என்பதும், 1ஆம் எண் கூண்டிற்கு புயல் உருவாகும் என்பதும் வானிலை ஆய்வு மையத்தின் விளக்கமாகும்.