தமிழ்நாடு

வலு குறைந்த புரெவி புயல் 3 மணி நேரமாக ஒரே இடத்தில் மையம்!

webteam


புரெவி புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்த நிலையில், சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் ஒரே இடத்தில் நிலைக் கொண்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் இலங்கையின் திருகோணமலை வழியே கரையை கடந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்துள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ராமநாதபுரத்திலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலும், பாம்பனிலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

மேலும், 3 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலைக் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து, ராமநாதபுரம் தூத்துக்குடி இடையே அடுத்த 6 மணி நேரத்துக்குள் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. அப்போது மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் அது தாழ்வுமண்டலமாக வலு குறையும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.