உக்ரைனில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை குறைகூறுவதை விட்டுவிட்டு, அவர்களை மீட்கும் பணியில் அக்கறை காட்டுங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின், "இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் மாணவர்கள் குறித்து உக்ரைனில் இருந்து வரும் செய்திகள் வருத்தமளிக்கிறது. மாணவர்கள் போர்த்தாக்குதல்கள் மற்றும் எல்லைகளில் விரோத நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் போது, மத்திய அரசு மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவரின் உயிரையும் பாதுகாப்பது இந்திய அரசின் பொறுப்பு. தேவையற்ற அறிக்கைகளை வெளியிடுவதை விட்டுவிட்டு ஒவ்வொரு இந்தியரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என அமைச்சர்கள் மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்" என தெரிவித்தார்