தமிழ்நாடு

தூத்துக்குடியில் முடிவுக்கு வந்தது 144 தடை !

தூத்துக்குடியில் முடிவுக்கு வந்தது 144 தடை !

webteam

தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு இன்று காலையுடன் முடிவுக்கு வந்தது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக கடந்த 21ம் தேதி அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் காவல்துறை துப்பாக்கிச்சூட்டால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 முறை தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருந்த 144 தடை உத்தரவு இன்று காலை 8 மணியுடன் முடிவுக்கு வந்தது. வேகமாக இயல்பு நிலை திரும்பி வருவதால், தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை என ஆட்சியர் தெரிவித்தார்.

இதனிடையே செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடிக்குச் சென்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். க‌லவரத்தின்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த பகுதிகளையும் அவர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு ‌தமிழக அமைச்சர் ஒருவர் அங்கே சென்றிருப்பது இதுவே முதல் முறை. இந்த சூழலில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நாளை தூத்துக்குடி செல்ல இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் ஆறுதல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.