ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை எங்கள் போராட்டம் நிற்காது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை பசுமை தீர்ப்பாயம் அமைத்தது. ஆய்வு மேற்கொண்ட அக்குழு சீல் இடப்பட்ட அறிக்கை ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி, ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது. ஆலையை மூட உத்தரவிட்டது இயற்கை நியதிக்கு முரணானது. முறையாக நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற மேகாலயா மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான உண்மை கண்டறியும் குழு கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் அளிக்கப்பட்டுள்ள அறிக்கை ஆச்சரியத்தையும் தரவில்லை, அதிர்ச்சியையும் தரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள வைகோ, நீதிபதி கோயல் அமர்வு ஒப்புக்காக விசாரணை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், இது ஒரு கண்கட்டு வித்தையாகவே இருக்கும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை என்றும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை போராட்டம் புதுப்புது வடிவம் எடுக்கும் அறிக்கையில் அவர் எச்சரித்துள்ளா