தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. 3 தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் 815 பக்க தீர்ப்பை வழங்கினர். அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், மேல்முறையீடு செல்லும்வரை தீர்ப்பை நிறுத்திவைக்கவும் மறுப்பு தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.