தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டம் தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டம் தள்ளிவைப்பு

jagadeesh

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் இன்றும், நாளையும் நடத்தவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை தள்ளிவைப்பதாக அறிவித்துள்ளனர்.

பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகள் தமிழ்நாடு ‌‌மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்‌தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, வேலை நிறுத்த போராட்டத்தை தள்ளி வைப்பதாக மாநில செயலாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ஊதிய உயர்வு, இடமாற்றத்தில் வெளிப்படைத்தன்மை, மேல்படிப்பில் 50 சதவீத ஒதுக்கீடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.