மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்
மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன்  PT
தமிழ்நாடு

“சோர்வாக காணப்பட்டார் செந்தில் பாலாஜி”- நேரில் சந்தித்த பின் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் பேட்டி

Jayashree A

மாநில மனித உரிமை சார்பாக, மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை இன்று சந்தித்தார்.

அதன்பின் அவர் செய்தியாளாரிடம் பேசும் பொழுது, “செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்தேன். அப்போது அவர் சோர்வாக காணப்பட்டார். அவரை விசாரணை செய்த பொழுது, அவர் கைதின் போது கடுமையாக நடத்தப்பட்டதாகவும், தன்னை அதிகாரிகள் தரதரவென்று இழுத்து தரையில் போட்டதால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.

செந்தில் பாலாஜி கைது

அவருக்கு இதய நோய் இருப்பதால் அதிகமாக அவரால் பேசமுடியவில்லை என்றும் கூறினார். அவரை தாக்கிய அதிகாரிகளின் பெயர்களை என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து புகார் பெற்றுள்ளேன். இது குறித்து நாளை விசாரித்து முடிவெடுப்போம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம், ‘அமைச்சர் என்றதும் நீங்கள் உடனடியாக நேரில் வந்து விசாரித்து நடவடிக்கை எடுக்கறீங்க... ஒரு சாமானியன் என்றால் இப்படி நடவடிக்கை எடுப்பீர்களா?’ என்று கேட்டதற்கு,

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம். இது அமைச்சர் என்றதும் ஊடகங்கள் வெளிச்சத்துடன் வருகிறீர்கள். சாமானியன் என்றால் நீங்கள் வருவதில்லை. இப்புகார் குறித்து நாளை நடவடிக்கை எடுப்போம்” என்று கூறினார்.