இசையமைப்பாளர் தேவா இசையமைப்பாளர் தேவா
தமிழ்நாடு

மறைந்த இசையமைப்பாளர் தேவா உடலுக்கு அரசு மரியாதை! - தமிழ்நாடு அரசு

மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Rishan Vengai

இசையமைப்பாளர் தேவா 76 வயதில் மறைந்தார். ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு வெற்றிப் பாடல்களை வழங்கிய அவர், கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். தமிழ்நாடு அரசு அவரது மறைவுக்கு அரசு மரியாதை வழங்கும் என அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் தேனிசைத் தென்றல் என கொண்டாடப்படும் இசையமைப்பாளர் தேவா, சென்னையில் இன்று காலை மாரடைப்பால் காலமானார், அவருக்கு வயது 76. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசையை வழங்கியிருக்கும் தேவா, அண்ணாமலை, பாட்ஷா, ஆசை, நேருக்கு நேர் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு பல வெற்றிப் பாடல்களை வழங்கிய அவர், விஜய், அஜித் ஆகியோரின் ஆரம்பகால வெற்றிக்கு முக்கியத் தூணாக விளங்கியவர்.

deva

திரைப்பட டைட்டில் கார்டில் ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்’ பெயர் தாங்கி வரும் BGM-ஐ இசையமைத்தவர் தேவாதான். இன்றுவரை அந்த BGM–க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். கானா பாடல்களுக்கு இணையாக மெல்லிசை பாடல்களுக்கும் புகழ்பெற்றவர் தேவா.

1990இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு அரசின் மாநில திரைப்பட விருதை பெற்ற அவர், 1992 தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதைப் பெற்றார். அதேபோல 1995 இல் ஆசை திரைப்படம் தேவாவுக்கு மற்றொரு மாநில திரைப்பட விருதை பெற்றுத்தந்தது.

இசையமைப்பாளர் தேவா

இந்தசூழலில் இசையமைப்பாளர் தேவாவிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.