தமிழ்நாடு

விரைவில் உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்

Sinekadhara

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடனான ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்தனர். அதில் குறிப்பாக திமுக சார்பில் வாக்குச்சாவடிகளை அதிகப்படுத்தவேண்டும் எனவும், அதிமுக சார்பாக நேரத்தை சற்றுக் குறைக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும் தேர்தக் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் மற்ற கட்சிகள் சார்பாக வலியுறுத்தப்பட்டது. குறிப்பாக 9 மாவட்டங்களிலும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும் எனவும், இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் தெரிவிக்கும் கருத்துகளுடன் உடன்பட்டு அதன் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் எனவும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்திருக்கிறார். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி விரைவில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் எனவும், மேலும் இந்த தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறார்.