மாநில கல்லூரி மாணவர்கள் முகநூல்
தமிழ்நாடு

ரயிலில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் மாநில கல்லூரி மாணவர்கள்!

சென்னையில் பேருந்து மற்றும் ரயில்களில், ரூட்டு தல கலாசாரம் நீடித்து வருகிறது.

PT WEB

ரயிலில் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் மாநில கல்லூரி மாணவர்கள், அதனை சமூக வலைதளத்திலும் அச்சமின்றி பதிவிட்டு வருகின்றனர்.

சென்னையில் பேருந்து மற்றும் ரயில்களில், ரூட்டு தல கலாச்சாரம் நீடித்து வருகிறது. இந்தநிலையில், மாநில கல்லூரியில் பயிலும் திருவள்ளூர் பகுதி மாணவர்கள், ஆபத்தான முறையில் ரயிலில் பயணம் செய்தும், அட்டகாசத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயிலில் கற்களை வீசுவது, பட்டா கத்தியுடன் அட்டூழியம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் அவர்கள், அதனை வீடியோவாக பதிவு செய்து கானா பாடல்களை சேர்த்து, இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர். ரயில்வே காவல் துறையினர் குறித்த அச்சமின்றி, மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.