தமிழ்நாடு

ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

ரஜினிகாந்துக்கு மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து

jagadeesh

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இந்தியளவில் பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினிகாந்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் " எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும்,  மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் " அன்பர் நண்பர் ரஜினிகாந்துக்குக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான் " என தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.