தமிழக அரசியல் நிலவரம் குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து முறையிட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்றிரவு டெல்லி செல்லும் ஸ்டாலின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ள ஸ்டாலினும் திமுக எம்பிக்களான கனிமொழி மற்றும் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடன் செல்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்புக்கு முன்பாக தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க திமுக தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீர்ப்புக்கு முன் பதவியேற்பு நடந்தால் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்றும் திமுக தரப்பில் குடியரசுத்தலைவரிடன் முறையிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.