தமிழ்நாடு

தமிழக அமைச்சர்கள் மீது ஸ்டாலின் புகார்

தமிழக அமைச்சர்கள் மீது ஸ்டாலின் புகார்

Rasus

மத்திய அரசு மீது தமிழக மக்களுக்கு உள்ள கோபத்தை திசை திருப்ப அதிமுக அரசின் அமைச்சர்கள் பாடுபடுவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஹைட்ரோகார்பன், நீட் தேர்வு, விவசாயக் கடன் தள்ளுபடி என கிடப்பில் உள்ள ஏராளமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அமைச்சர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார். ஆனால் டெல்லி செல்லும் அதிமுக அமைச்சர்கள் தமிழகத்திற்கு நிதி பெற்றோம் எனக் கூறி எடுக்கும் படங்களை மட்டும் பார்க்க முடிவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆதி திராவிட, பழங்குடியின மாணவிகள் நலனுக்காக ஒதுக்கப்பட்ட 36 கோடி ரூபாயை மாநில அரசு செலவிடாமல் அப்படியே மத்திய அரசுக்கு திரும்பித் தந்துள்ள அவலம் நடந்துள்ளதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். இது தவிர இம்மாணவ, மாணவியருக்காக அளிக்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை 2 ஆயிரத்து 598 கோடி ரூபாய் மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளதாகவும் ஸ்டாலின் அதிருப்தி தெரிவித்தார்.