திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனையில் இருந்து, செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புறப்பட்டனர். அதேபோல், திமுக முக்கிய நிர்வாகிகள்
மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனை பகுதியில் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர். திமுக தலைவர் உடல்நிலை சீராகி வருவதால் மருத்துவமனை வளாகத்தில் இருந்து தொண்டர்கள் கலந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். காவேரி மருத்துவமனைப் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது.
“கருணாநிதி நலமுடன் இருக்கிறார்; போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் கலைந்து செல்லுங்கள்” என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வேண்டுகோள் விடுத்தார்.