தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி திமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதலமைச்சர் கூறியிருப்பது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என குறிப்பிட்டுள்ளார். இந்த அவசர சட்டத்தை முன் கூட்டியே மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கொண்டு வந்திருந்தால் ஐல்லிக்கட்டு பொங்கல் அன்றே சீரும் சிறப்புமாக நடத்தப்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இனிவரும் காலங்களில் ஜல்லிக்கட்டு தடைபடாத வகையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாகவும் அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.