உலகில் மிகச்சிறிய செயற்கைக் கோளை தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் கிட்ஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
செயற்கைக்கோளை மாணவர்கள் உருவாக்கியுள்ளதற்கு பாராட்டு தெரிவித்த ஸ்டாலின், அதற்கு கலாம்சாட் என பெயரிட்டுள்ளதற்காக மகிழ்ச்சியும் தெரிவித்தார். செயற்கைக் கோளை வடிவமைத்த தமிழகத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ரிஃபாத் ஷாருக் தலைமையிலான குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின், தமிழகத்திலிருந்து இளம் விஞ்ஞானிகள் பலர் உருவாக வேண்டும் என கூறினார்.