தமிழ்நாடு

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஸ்டாலின் கண்டனம்

webteam

கூவத்தூரில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் மொத்தமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் கூவத்தூர் சொகுசு விடுதிக்குச் செல்லும் பாதை மறிக்கப்பட்டுள்ளதாகவும், ஊர் மக்கள் நடமாட முடியாத நிலையை அதிமுகவின் சசிகலா ஆதரவு ஆட்கள் அராஜகம் செய்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்‌. அதிமுக எம்எல்ஏக்களை கண்காணிப்பதற்காக வெளியூர்களில் இருந்து ரவுடிகள் குவிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் மீது 11ஆம் தேதி கல்வீசி தாக்குதல் நடத்திய ஆதாரப்பூர்வமாக காட்சிகள் வெளியானதாகவும் அவர் கூறியுள்ளார். மீண்டும் அங்கு எம்எல்ஏக்களை சந்திக்க சசிகலா சென்றபோது ஊடகத்தினர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு மிரட்டல் விடுத்ததுடன், பெண் செய்தியாளர்கள் இழிவுபடுத்தப்பட்டதாகவும் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் தாக்கியவர்கள் மீதும், ஏவியவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.