தமிழ்நாடு

அரசியல் கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுகிறார் முக.ஸ்டாலின் - பவன் கல்யாண்

அரசியல் கட்சிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் செயல்படுகிறார் முக.ஸ்டாலின் - பவன் கல்யாண்

kaleelrahman

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக, ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என கூறியுள்ளார். மேலும், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதை வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் செய்து வருவதாகவும் ஸ்டாலினை, பவன் கல்யாண் பாராட்டியுள்ளார்.