தமிழ்நாடு

தூத்துக்குடி: காவல்நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு

தூத்துக்குடி: காவல்நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு

webteam

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

தூத்துக்குடி புதுக்கோட்டை புதுநகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.(50). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை பணிக்கு சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் பணி ஒதுக்கீடு அணிவகுப்பில் கலந்து கொண்ட பின் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனடியாக காவலர்கள் அனைவரும் அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். பின்னர் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ளது.