தமிழ்நாடு

பொதுசேவை ஊழியர்களுக்கு மாணவர்கள் வழங்கிய சான்றிதழ்

பொதுசேவை ஊழியர்களுக்கு மாணவர்கள் வழங்கிய சான்றிதழ்

webteam

காஞ்சிபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியில், பொதுச் சேவையில் ஈடுபடும் கடைநிலை அரசு ஊழியர்களுக்கு மாணவர்கள் கையால் சான்றிதழ் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. 

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் உள்ள எஸ்ஆர்எம் பப்ளிக் பள்ளியில் பொதுசேவை ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் காவல்துறையினர், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள் பிஎஸ்என்எல் பணியாளர்கள், ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் பள்ளியின் சார்பில் அவர்களைப் பாராட்டி மாணவர்களின் கையால் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. பரிசு பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் வசுமதி சீனிவாசன், ஆலோசகர் டாக்டர்.மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர்.