எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் ஆருஷ் 17 நிகழ்ச்சியை எஸ்.ஆர்.எம் குழும தலைவர் பாரிவேந்தர், கவுரவ ஜெனரல் டாக்டர் வி.கே.சிங் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் 'ஆரூஷ் 17' என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த கெளரவ ஜெனரல் வி.கே சிங் மற்றும் டாக்டர் டி.ஆர். பாரி வேந்தர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். விழாவில் எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் டாக்டர் பாரி வேந்தர் தலைமை உரையாற்றினார். பின்னர், சிறப்பு விருந்தினர் வி.கே.சிங் உரை நிகழ்த்தினார்.
விழாவில் ஆரூஷ் சோவினிர் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. ஆரூஷ் 17 என்ற தலைப்பில் காணொளி காட்சி ஒன்று திரையிடப்பட்டது. இதனை சிறப்பு விருந்தினர் உட்பட அனைவரும் பார்வையிட்டனர்.