தமிழ்நாடு

"ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை" தலைமை அர்ச்சகர்

"ஸ்ரீரங்கம் சிலை மாற்றப்படவில்லை" தலைமை அர்ச்சகர்

webteam

ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன்நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலிலும் பல சிலைகள் காணாமல் போய்விட்டதாகவும், உற்சவர் சிலை மாற்றப்பட்டு விட்டதாகவும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கைநீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் விசாரித்த போது உரிய விசாரணை நடத்துமாறு சிலைக்கடத்தல் பிரிவு தலைவர் பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர்.  இந்த நிலையில் ஸ்ரீரெங்கம் ரெங்கநாதர் கோவில் தலைமை அர்ச்சகர் முரளி பட்டர் புதியதலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, " ஸ்ரீரங்கம் கோவில் மூலவர் (சொதையை) மெல்லிய சுண்ணாம்புக்காரை மாற்றுவதென்பது சாத்தியம் இல்லாதது. விக்கிரகத்தில் தேய்மானம் ஏதும் தென்பட்டால் அதை சீர் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறதோ அப்போது ஆகம விதிப்படி சீர் செய்வோம் என்றார்.

மேலும் பேசிய அவர் அதன்படி தான், கடந்த 1986, 2001, 2015 - ம் ஆண்டுகளில் சொதை  காணப்பட்ட சிறிய அளவிலான  தேய்மானங்கள் சீர்செய்யப்பட்டன. இவை அனைத்தும் ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்டே நடந்தது.
சொதையை நகர்த்தி அதன் கீழே என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது. வருடம் ஆக, ஆக சிலமாறுதல்கள் அடையும். எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்ளவே பல்வேறு ஆலோசனைகளுக்கு பிறகே சரி செய்யப்பட்டது என்றார்.  உற்சவர் திருமேனி பஞ்சலோகத்தாலானது ஆகும். தேவஸ்தான ஆவணத்தில் பஞ்சலோக சிலை என்று உள்ளது. இதற்கு தங்க முலாம் பூசுவது கிடையாது. அர்ச்சகரை தவிர வேறு யாரும் உள்ளே செல்லவே முடியாது. மேலும் இவ்வாலயத்தில் 32 அர்ச்சகர்கள், 300 ஸ்தலத்தார்கள் உள்ளனர். இவர்களை கடந்து தன சிலையை கொண்டு செல்லமுடியும். நாங்கள் பழைய உற்சவரை கொண்டே பூஜித்து வருகிறோம். இதுபற்றி வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் 1000 சதவீதம் பொய்யானது. இதனை யாரும்
நம்பவேண்டாம்", என்றும் கூறினார்.