OUR TEMPLES என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வரும் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், அதில் மதரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கருத்து தெரிவித்து வருகிறார்.
அந்த வகையில், ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளுக்கு நடந்த அபச்சாரங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த வீடியோவில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து கருத்துகளை தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் தரப்பில் சென்னை காவல் ஆணையருக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டிருந்தது.
அதன் பேரில் விசாரித்த மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் காவல்துறையினர், ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீரங்கம் சென்ற தனிப்படையினர், அவரைக் கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.