கச்சத்தீவு அருகே மீன் பிடித்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் மற்றும் மண்பம் பகுதியிலிருந்து சுமார் 500 படகுகளில் மீனவர்கள் நேற்று கடலுக்குள் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது, இலங்கை கடற்படையினர் 10 ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் கல் மற்றும் பாட்டில்களை கொண்டு தங்களை தாக்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் கூறினர். இதனால் 100க்கும் மேற்பட்ட படகுகளில் சென்ற மீனவர்கள் வெறுங்கையுடன் கரை திரும்பினர். மேலும் இந்த தாக்குதலின் போது 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்ததாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு ராமேஸ்வரம் மீனவர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.