இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் 20 படகுகளை மட்டும் நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது.
தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கையில் இருந்து மீட்டுத் தரக்கோரி மீனவ சங்கத்தினர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், ட்ரூ சிலோன் என்ற இணையதள செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அமைச்சர் மஹிந்தா அமரவீர அளித்துள்ள பேட்டியில், தமிழக மீனவர்கள் படகுகளில் 20 படகுகளை மட்டும் முதற்கட்டமாக நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க உள்ளோம் எனக் கூறியுள்ளார்.