தமிழ்நாடு

அணில்குட்டிகள் மூலம் டிக்டாக்கில் வைரலான பெண்

அணில்குட்டிகள் மூலம் டிக்டாக்கில் வைரலான பெண்

webteam

அன்புக்கு எந்தப் பேதமும் கிடையாது. அதற்கு உதாரணமாக காஞ்சிபுரத்தில் பெண் ஒருவர் அணில்களை குழந்தைகள் போல வளர்த்து வருகிறார். அந்த அணில்களும் அந்தப் பெண்ணிடம் அன்பு செலுத்துகின்றன. 

காஞ்சிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே சாமுண்டீஸ்வரி என்ற பெண்மணி நான்கு அணில்குட்டிகளை வளர்க்கிறார். குட்டி என்று இவர் குரல் கொடுத்தால், எங்கிருந்தாலும் ஓடி வரும் அணில்கள் சாமுண்டீஸ்வரின் மேலேறி சர்வ சாதாரணமாக விளையாடுகின்றன. 

ஜெராக்ஸ் கடையொன்றில் வேலை செய்யும் இவர், 4 மாதங்களுக்கு முன் அந்தக் கடையில் வாழைத்தாரில் கண் திறக்காத நான்கு அணில்குட்டிகளை கண்டெடுத்தார். அவற்றை வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கத் தொடங்கிய சாமுண்டீஸ்வரி,  நேரத்துக்கு உணவளித்து பராமரிக்கிறார்.

குழந்தைகள் இல்லாத நிலையில் அணில்களையே தனது பிள்ளைகள் போல நினைப்பதாக கூறும் சாமுண்டீஸ்வரி, அணில்களுடன் சேர்ந்து பதிவிடும் டிக் டாக் வீடியோக்களால் பிரபலமடைந்து வருகிறார்.

வீடியோ: