பூமி சூரியனை ஒருமுறை சுற்றுவதற்கு 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. பூமி தனது அச்சில் 23.5 டிகிரி சாய்ந்து சுற்றுவதன் காரணமாக வருடம் தோறும் சமமான பகல் மற்றும் இரவு ஏற்படுவதில்லை. ஆனால், மார்ச் மாத காலகட்டத்தில் பூமியின் அச்சு சூரியனை நோக்கியோ அல்லது விலகியோ சாய்வதில்லை, இதன் விளைவாக உலகம் முழுவதும் பகல் மற்றும் இரவின் அளவு ஏறக்குறைய சமமாக இருக்கும்.
கிபி முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க அறிஞரான கிளாடியஸ் டோலமி மார்ச் மாதத்தில் பூமியின் மேற்பரப்பில் செங்குத்தாக விழும் என்பதை கணித்தார். இது வட அரைக்கோளத்தில் வசந்த காலத்தின் தொடக்கத்தையும், தென் அரைக்கோளத்தில் இலையுதிர் காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்நிலையில் இந்த வருடம் மார்ச் 20 ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 2:31க்கு வசந்த கால சம இரவு நிகழ்வு நடைபெற்றது.
பூமி சூரியனை சுற்றும் காலத்தின் அடிப்படையில் கணிதவியல் ஆக கணிக்கப்பட்ட நிலையில், மீட்டியோசாட்-12 தெளிவான புகைப்படமாக அந்த நிகழ்வை காட்சிப்படுத்தியுள்ளது. மீட்டியோசாட்-12 எடுத்த புகைப்படத்தில் ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தின் இடது பகுதியில் சூரிய ஒளி மிகுந்ததாகவும் வலது புறத்தில் இரவு பொழுதுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இந்த வசந்த காலம் என்பது உலகம் முழுவதும் கலாச்சார ரீதியாக பல முக்கிய விழாக்கள் கொண்டாடுவதற்கு தேதி குறிக்கும் நாளாக இருக்கிறது.
இந்தியாவில் உகாடி, கோடி பந்திகை, நவ்ரோஸ் (பார்ஸி புத்தாண்டு) ஜப்பானில் ன்புன் நோ ஹி, பெரு நாட்டில் மச்சு பிச்சுவில் சூரிய வழிபாடு, மேற்கு நாடுகளில் Ostara (பழங்கால ஜெர்மானிய வசந்த விழா) இதன் மூலம் இயற்கையின் மாற்றத்தையும், நாள் - இரவு சமநிலையையும் கொண்டாடும் வழக்கம் பல்வேறு கலாச்சாரங்களில் உள்ளது. இவ்வளவு நாட்களாக வானவியல் அடிப்படையில் வசந்த சமநிலை நிகழ்வு கருதப்பட்ட நிலையில் மீட்டியோசாட்-12 எடுத்த புகைப்படம் அறிவியல் ரீதியாகவும் உறுதிப்படுத்தி உள்ளது.