தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து தூக்கிச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஆன்மிக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் நடைபெறவுள்ள ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் என்ற நிகழ்ச்சியில் ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் தூக்கி செல்வது மனித உரிமையை மீறிய செயல் என்று திராவிடர் கழகம் உள்ளிட்ட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திட உள்ளதாகவும், அவ்வாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் அறிக்கையில் பட்டினப்பிரவேச நிகழ்ச்சியை தடை செய்திட சில தினங்களுக்கு முன்னர் கேட்டுகொண்டிருந்தார். அதன்பேரில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 23 இன்படி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதாலும் பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதினகர்த்தரை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி நேற்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மீக பேரவைகளை கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கோட்டாட்சியரின் உத்தரவை திரும்பபெற்று பட்டனப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையின்றி நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் ஆன்மிக சமய பாதுகாப்பு பேரவையினர் மனு அளித்துள்ளனர். இந்த உத்தரவிற்கு பல்வேறு ஆன்மீக பேரவைகளை கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் கோட்டாட்சியரின் தடை உத்தரவை திரும்பபெற்று தருமபுர ஆதீன பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சியை தடையின்றி நடத்த ஆவன செய்ய வேண்டி மாவட்ட ஆட்சியர் லலிதாவிடம் மனு அளித்துள்ளனர்.
`ஆதீனகர்த்தரை சொக்கநாதபெருமானாக கருதி வனங்கி பக்தர்கள் பூரனகும்பமறியாதையுடன் பூஜைகள் செய்து கொலுபீடத்தில் அமரவைத்து கடவுளாக பாவிப்பர் பலநூற்றாண்டுகளாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆன்மிக நிகழ்வுகளை நடத்த அரசு தடை ஏற்படுத்தாமல் சிறப்பாக நடத்த அனுமதியளிக்க வேண்டும்’ என்று அவர்கள் ஆட்சியரிடம் கேட்டுகொண்டனர்.