தமிழ்நாடு

"பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தயார்" - ராதாகிருஷ்ணன்

"பட்டாசு தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு பிரிவு தயார்" - ராதாகிருஷ்ணன்

கலிலுல்லா

தீபாவளி பண்டிகை காலத்தில் பட்டாசால் ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளிலும் தீக்காயப் பிரிவு தயார் நிலையில் இருப்பதாக மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மருத்துவமனைகளிலும் குறைந்தது 10 படுக்கைகள் கொண்ட தீக்காயப் பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மெகா தடுப்பூசி முகாமில் 20 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும், மேலும் 51 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

55 சதவீத முதியோர்கள் தடுப்பூசி போடாத நிலையில், அவர்களது பட்டியலை தயாரித்து வீடு வீடாகச் சென்று கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.